மருத்துவமனையில் நடந்த திருமணம்: வெளியாகியுள்ள நெகிழவைக்கும் காட்சிகள்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், மருத்துவமனை ஒன்றில் நடந்த திருமணம் குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளன.
மருத்துவமனையில் நடந்த திருமணம்
மத்தியப் பிரதேசத்திலுள்ள Kumbhraj என்னும் நகரில் வாழும் ஆதித்யா சிங்குக்கும் நந்தினி சொலாங்கிக்கும் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு திடீரென மணப்பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
நந்தினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, அவரது நிலைமை மோசமானதால் உள்ளூர் மருத்துவமனை அவரை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்ப, அவர்கள் 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இன்னொரு மருத்துவமனைக்கு நந்தினியை அனுப்பிவைத்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அடுத்த முகூர்த்த நாள் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் வருகிறதாம். ஆகவே, உடனடியாக திருமணத்தை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட, மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் ஆதரவளிக்க, புதன்கிழமையன்று ஆதித்யா சிங்குக்கும் நந்தினி சொலாங்கிக்கும் மருத்துவமனையிலேயே திருமணம் நடைபெற்றது.
Saath phere in hospital see video pic.twitter.com/C1vdaHPhRi
— Viral Info (@3Chandrayaan) May 2, 2025
புறநோயாளிகள் பிரிவு அலங்கரிக்கப்பட்டு, அங்கேயே மணமேடை அமைக்கப்பட, திருமணம் நடைபெற்றது.
மணப்பெண்ணால் நடக்க முடியாததால், மணமகன் அவரை தன் கைகளில் சுமந்தபடி அக்னி பீடத்தை சுற்றிவர, காண்போர் நெகிழ்ந்தனர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாக, அந்த வீடியோவை இணையத்தில் காண்பவர்களும் நெகிழ்கிறார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |