திருமண ஆலோசகராக மாறிய தோனி! மணமகனிடம் கூறியது என்ன? வைரல் வீடியோ
திருமண நிகழ்வு ஒன்றில் எம்.எஸ்.தோனி கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருமண ஆலோசனை
உத்கர்ஷ் சங்வி, த்வானி கனுங்கோ ஆகியோரின் திருமண நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கலந்துகொண்டார்.
அப்போது அவர் புதுமணத் தம்பதிகளுக்கு நகைச்சுவையான திருமண ஆலோசனைகளை வழங்கினார்.
தோனி மேடையில் ஏறியபோது, "திருமணம் மிகவும் நல்ல விடயம் நீங்கள் அதைச் செய்ய அவசரப்பட்டவர்" என்று மணமகனிடம் கூறினார்.
பின்னர், "சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள், அவர் (உத்கர்ஷ்) அவர்களில் ஒருவர். உலகக்கிண்ணத்தை வென்றாலும், இல்லையென்றாலும் பரவாயில்லை; திருமணத்திற்கு பிறகு எல்லா கணவர்களும் ஒரே நிலையில் இருக்கிறார்கள்" என மணப்பெண்ணிடம் தோனி கூறுகிறார்.
மீண்டும் மணமகனிடம் திரும்பிய அவர், "உங்கள் மனைவி வேறு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்" என கூற, அதற்கு உத்கர்ஷ், "என் மனைவி வேறுபட்டவர்!" என சிரிப்புடன் பதிலளித்தார்.
மேலும், தோனி மணமகளை நோக்கி, கணவர் வருத்தப்படும்போது அமைதியாக இருந்தால், ஆண் விரைவில் அமைதியாகி தங்களது வலிமையை ஒப்புக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் தம்பதியினரை வாழ்த்தி தோனி தனது உரையை முடித்தார்.
அவர் மேடையை விட்டு வெளியேறியதும், கூட்டத்தினர் ஒரு அரங்க நிகழ்வைப் போலவே "தோனி! தோனி!" என்று கோஷமிடத் தொடங்கினர்.
காதல் குரு
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி 4.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், பதிவிட்டதில் இருந்து 3,28,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.
பயனர் ஒருவர் நகைச்சுவையாக "தல (தோனி) திருமணம் மற்றும் காதல் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்" என கூறினார்.
இன்னும் சில பயனர்கள் தோனியை 'காதல் குரு' என்றும், ரசிகர்கள் சிலர் 'திருமண ஆலோசகர்' என்றும் நகைச்சுவையாக குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |