ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத இமாலய சாதனையை படைத்த தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 Dismissals செய்து சாதனை படைத்தார்.
எம்.எஸ்.தோனி
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் தோனி 11 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் கேட்ச், ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் செய்தும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
𝙀𝙖𝙨𝙞𝙡𝙮 𝘿𝙤𝙣𝙚 😎
— IndianPremierLeague (@IPL) April 14, 2025
Dismissal No.2⃣0⃣0⃣ for MS Dhoni
Wicket No.2⃣ for Ravindra Jadeja tonight
🎥 @ChennaiIPL fans have plenty to celebrate here 💛
Updates ▶ https://t.co/jHrifBkT14 #TATAIPL | #LSGvCSK | @msdhoni | @imjadeja pic.twitter.com/UHwLwpJ4XK
லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்தன் மூலம், தோனி 200 முறை Dismissals (ஸ்டம்பிங், ரன்அவுட் மற்றும் கேட்ச்) எனும் இலக்கை எட்டினார்.
ஐபிஎல் வரலாற்றில் 200க்கும் மேல் ஸ்டம்பிங், கேட்ச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) படைத்தார்.
அதிகமுறை ஐபிஎல்லில் Dismissals செய்த விக்கெட் கீப்பர்கள்
- எம்.எஸ்.தோனி - 201
- தினேஷ் கார்த்திக் - 182
- ஏபி டி வில்லியர்ஸ் - 126
- ராபின் உத்தப்பா - 124
- விரித்திமன் சஹா - 118
- விராட் கோஹ்லி - 116
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |