தோனிக்கு அடுத்து இவர் தான் சிஎஸ்கே கேப்டன்? வாயை பிளந்த முன்னணி வீரர்கள்
Nandhini
in கிரிக்கெட்Report this article
தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ்.தோனி
கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வருபவர் எம்.எஸ்.தோனி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, இவருக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடி கோப்பையை கைப்பற்றியது. தற்போது, தோனி முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வருகிறார்.
தோனிக்கு பிறகு யார் கேப்டன்?
இந்நிலையில், இனி வரும் ஐபிஎல் தொடர்களில் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பிடித்த ருதுராஜ் கெய்க்வாட் 52 போட்டிகள் விளையாடி 1797 ஓட்டங்கள் குவித்தது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த சாதனையை அடுத்து, குறுகிய காலத்தில் முன்னணி வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ருதுராஜ் கெய்க்வாட் உயர்ந்துள்ளார். வெறும் 10 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுவிட்டார். இது முன்னணி வீரர்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் வரும் ஐபிஎல் தொடர்களில் எம்.எஸ்.தோனிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |