ராஜபக்சாவை ஓடி வந்து கில்லி மாதிரி ரன் அவுட் செய்த தோனி! வைரலாகும் வீடியோ
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பனுகா ராஜபக்சாவை தோனி ரன் அவுட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஒரு கட்டத்தில் பஞ்சாப் வீரர் ராஜபக்சா 9 ரன்களுடன் ஆடி கொண்டிருந்தார். அப்போது ராஜபக்சே அடித்த பந்தை ஜார்டன் ஓடி வந்து பிடித்தார்.
Run out dhoni you beauty ?#IPL2022 pic.twitter.com/bYwD0B97HC
— Cricket Gamee (@cricketgamee62) April 3, 2022
இதையும் படிங்க: க்ளீன் பவுல்டு செய்த அஸ்வின்! நிதானத்தை இழந்து பேட்ஸ்மேனிடம் ஆக்ரோஷமாக கத்திய வீடியோ
அதற்குள் ரன் ஓடிவிடலாம் என நினைத்த ராஜபக்சா, மீண்டும் பாதியில் நின்று மிண்டும் நின்ற முனைக்கே திரும்பினார். இதனை பார்த்த ஜார்டன் பந்தை தூக்கி தோனியிடம் வீசினார்.
அதற்குள் தோனி ஸ்டம்பை நோக்கி ஓடி பந்தை பிடித்து பாய்ந்து ரன் அவுட் செய்தார். இதனையடுத்து சிஎஸ்கே வீரர்கள் தோனியை வந்து வாழ்த்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜபக்சா, நடுவரின் முடிவுக்காக காத்திருக்காமல் அவரே பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார்.
40 வயதிலும் தோனி கில்லி மாதிரி விக்கெட் கீப்பிங் செய்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
The agility, the sprint, the run out and fitness at the age of 40.. Just Dhoni things pic.twitter.com/CgGs8Gx03p
— mvrkguy (@mvrkguy) April 3, 2022