அதிகாரம் இல்லாமல் தோனியின் பெயரை வைத்து Cricket Academy.., முன்னாள் Business Partner கைது
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான மிஹிக் திவாகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான மிஹிக் திவாகரை பொலிஸார் கைது செய்ததற்கு, அவர் மோசடியில் ஈடுபட்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இவர், தற்போது ஆர்கா ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
வழக்கின் பின்னணி என்ன?
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மிஹிக் திவாகருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில், தன்னுடைய பெயரை எந்தவொரு அதிகாரம் இல்லாமல் கிரிக்கெட் அகாடமிகளை அமைப்பதற்கு மிஹிர் திவாகர் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போதிலும் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் தனது பெயரை பயன்படுத்தி கிரிக்கெட் அகாடாமிகளை திறந்து வைத்துள்ளார். இதனை தவிர எம்.எஸ்.தோனி கிரிக்கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக ரூ.15 கோடி மோசடி செய்துள்ளார்.
அவர், இயக்குனராக இருக்கும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட உரிமை கட்டணத்தையும், பங்கு லாபத்தையும் செலுத்த வேண்டிய போதிலும் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டது.
இதன் பின்னர், ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் மீது தோனியால் அதிகாரப்பூர்வ கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மிஹிர் திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |