ஐபிஎல் இறுதி போட்டியில் வென்ற சென்னை அணி! ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய தோனி
அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிய சென்னை அணியின் கேப்டன், தோனி ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி
ஐபிஎல் இறுதி போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
?? ??? ??? ??????? ????
— Chennai Super Kings (@ChennaiIPL) May 29, 2023
?????? ??? ??? ?????
?????????? ?? ??! ??#CHAMPION5 #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/yw9sv30xLz
மழையின் காரணமாக சிறிது தாமதமாக பேட்டிங்கை துவங்கிய சென்னை அணி, 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை எதிர்கொண்டு ஆடி, சாம்பியன் பட்டம் வென்றது.
ஓய்வு குறித்து தோனி உருக்கம்
இதனை தொடர்ந்து ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இது குறித்து பேசிய தோனி
‘மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதி போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். என் கண்களில் கண்ணீர் மிதந்தது, என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம், ஆனால் எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.
The interaction you were waiting for ?
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
MS Dhoni has got everyone delighted with his response ? #TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/vEX5I88PGK
இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது, ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், அடுத்த 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும், அதற்காக நான் உடலை தயார் செய்ய வேண்டும்.
ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதங்கள் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று’ என தோனி கூறியுள்ளார்.