ரூ 15 கோடி முறைகேடு... எம்.எஸ் தோனியை நம்ப வைத்து ஏமாற்றிய நண்பர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி (Mahendra Singh Dhoni) மோசடியால் பல கோடி ரூபாய் இழந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூ.15 கோடி மோசடி
டோனியின் தொழில் பங்குதாரரான அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரூ.15 கோடி மோசடி செய்துள்ளதாக டோனி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட்டின் சௌமியா பிஸ்வாஸ் மற்றும் மிஹிர் திவாகர் ஆகியோர் மீதே ராஞ்சி நீதிமன்றத்தில் டோனி சார்பில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
@ians
டோனியின் பெயரில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் கிரிக்கெட் அகாடமிகளை அமைப்பதற்காக எம்எஸ் டோனியுடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதில் டோனி சார்பில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் மிஹிர் திவாகர் அந்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றே கூறப்படுகிறது. திவாகர் அர்கா ஸ்போர்ட்ஸ் உரிமைக் கட்டணத்தைச் செலுத்தி டோனியுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
வழங்கப்பட்ட உரிமையும் ரத்து
ஆனால் திவாகர் அவ்வாறு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் டோனிக்கு ரூ 15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிபந்தனைகளுக்கு இணங்காததால் 2021 ஆகஸ்ட் 15 அன்று அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு டோனி சார்பில் நோட்டீஸ் அனுப்ப்பப்பட்டுள்ளது.
Credit: Gulte
அத்துடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமையும் ரத்து செய்யப்பட்டது. டோனி தனது தொழில் பங்குதாரர் திவாகருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை என்றும், இதனையடுத்தே ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |