பணம் நகைகளை பறித்து... கணவருடன் வீடியோ அழைப்பினிடையே மரணம்: விலகாத மர்மம்
கேரள மாநிலம் அஞ்சல் பகுதியை சேர்ந்த செவிலியரின் திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் தங்கியிருந்த குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் செவிலியர் முஹ்சினா கண்டெடுக்கப்பட்டார்.
ஒரு மாதம் முன்பு முஹ்சினா பணியாற்றி வரும் பகுதிக்கு சென்ற கணவர் சமீர் அவரிடம் இருந்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சமீர் உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் தமது மனைவி முஹ்சினாவை துன்புறுத்தி வந்துள்ளார் என குடும்பத்தினரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, தற்போது முஹ்சினா விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை முன்னெடுக்க குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மே 21ம் திகதி சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் தமது குடியிருப்பில் முஹ்சினா சடலமாக மீட்கப்பட்டார். கணவருடன் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டதினிடையே முஹ்சினா தற்கொலை செய்து கொண்டார் என்றே முதற்கட்ட தகவல் வெளியானது.
தற்போது இந்த விவகாரத்தில் மர்ம இருப்பதாக கூறி முஹ்சினாவின் குடும்பத்தினர் கேரளாவில் பொலிசாரை நாடியுள்ளனர்.
மட்டுமின்றி கேரள முதலமைச்சருக்கும் இது தொடர்பில் புகார் மனு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.