இன்னும் பல கோடிகளை குவிக்க தயாராகும் முகேஷ் அம்பானி! அடுத்து இறங்க போகும் துறை இதுதான்
உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும் BioGas துறையில் இறங்கவுள்ளனர்.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகிய இருவரும் சமீபமாக ஓரே துறையில் போட்டி போடும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் தற்போது இருவரும் BioGas தயாரிப்பு துறையில் இறங்கவுள்ளனர்.
இந்தப் பிரிவில் யார் அதிக வருமானத்தையும் லாபத்தையும் பார்க்கப்போவது என்பதில் பெரிய போட்டி இருக்கப்போகிறது. அதானி-யின் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தலா இரண்டு புதிய கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas - CBG) தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
siasat
இந்தத் தொழிற்சாலைகளை அமைக்க அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலா ரூ. 600 கோடி அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas - CBG) என்பது விவசாயக் கழிவுகள், கரும்பு சக்கை கழிவுகள் மற்றும் நகராட்சி கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது.
மேலும் CBG மூலம் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும். போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில் கெளதம் அதானி 4வது இடத்திலும், முகேஷ் அம்பானி 10வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
indiatimes