முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி, நாட்டின் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றான ஆன்டிலியாவில் வசிக்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த வசதி
மும்பையின் மிகவும் சொகுசான பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள ஆன்டிலியா, கும்பாலா ஹில் பகுதியில் உள்ள அல்டமவுண்ட் சாலையில், 4,532 சதுர மீற்றர் நிலப்பரப்பில் 27 மாடிகள் கொண்ட மாளிகையாகும்.
இந்த மாளிகையானது ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கியது மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளால் நிரம்பியுள்ளது. இந்த மாளிகையில் ஒரு உடற்பயிற்சி கூடம், ஸ்பா, பல நீச்சல் குளங்கள், ஒரு திரையரங்கம், அழகான மொட்டை மாடி தோட்டங்கள், ஒரு கோயில் மற்றும் ஒரு சுகாதார மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பார்க்கிங்கிற்கு மட்டும் ஆறு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, சுமார் 168 கார்களுக்கு இடவசதி அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளில் ஆன்டிலியாவின் மதிப்பு சுமார் ரூ. 15,000 கோடி. இந்த பிரமாண்டமான கட்டிடத்தின் கட்டுமானம் 2006 இல் தொடங்கி 2010 இல் நிறைவடைந்தது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ்
ரிக்டர் அளவுகோலில் 8 வரையிலான நிலநடுக்கங்கள் போன்ற பெரிய இயற்கை பேரிடர்களைத் தாங்கும் அளவுக்கு இது மிகவும் வலிமையான முறையில் கட்டப்பட்டுள்ளது. 2010 பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி குடும்பம் முதல் முறையாக இங்கு குடிவந்தனர்.
கணிசமான அளவு மின்சாரம்
400,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த மாளிகையில் பல ஆடம்பரமான வசதிகள் காரணமாக இதற்கு கணிசமான அளவு மின்சாரம் தேவைப்படும். ஆன்டிலியாவில் ஒரே மாதத்தில் 6,37,240 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது, இதன் விளைவாக ரூ.70,69,488 மின் கட்டணம் வசூலானது.
இந்த 27 மாடி குடியிருப்பில் முகேஷ், நிதா, அனந்த், ஆகாஷ், ஸ்லோகா, பிருத்வி மற்றும் வேதா அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஒன்பது அதிவேக லிஃப்ட்கள், பல மாடி பார்க்கிங் அமைப்பு மற்றும் பணியாளர்களுக்கான அறைகளும் கூட உள்ளன.
ஆனால் அம்பானி குடும்பம் மொத்தம் 26வது மாடியிலேயே வசித்து வருகின்றனர். இங்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |