உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ்
சீனாவும் ரஷ்யாவும் இணைந்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சூழல் ஏற்படும் என்று வாழும் நோஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழப்பத்தை ஏற்படுத்தும்
மேற்கத்திய நாடுகளின் எதிரிகளாக கருதப்படும் சீனாவும் ரஷ்யாவும் வலுவான கூட்டணி அமைத்து சைபர் தாக்குதல்களை தொடுப்பார்கள் என்றும்,
அமெரிக்கா, ஐரோப்பாவின் முதன்மையான நாடுகள் மற்றும் ஜப்பானில் உள்ள மின்சார கட்டமைப்புகளை சீர்குலைத்து, இந்த நாடுகளின் மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள் என்றும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
சீனாவும் ரஷ்யாவும் முன்னெடுக்கும் இந்தப் போரானது ஏவுகணை, அதி நவீன ட்ரோன்கள் அல்லது அச்சுறுத்தும் டாங்கிகளால் முன்னெடுப்பதல்ல என்றும், டிஜிட்டல் சீர்குலைவை மையமாகக் கொண்ட, யார் முன்னெடுப்பது என கண்டுபிடிக்க முடியாத ஒரு போர் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது செயற்கைக்கோள் அமைப்புகள், வங்கிகள் மற்றும் விமான நிலையங்களை நாசமாக்கி, குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் சர்வசாதாரணமாக முன்னெடுக்கப்படும். இதுவொரு கற்பனைக் கதையாக தோன்றலாம், ஆனால் மிக விரைவில் இது நிஜமாகும் என்கிறார் வாழும் நோஸ்ட்ராடாமஸ்.
இதன் முதற்கட்ட நகர்வுகள் தொடங்கிவிட்டது, ஐரோப்பாவின் சில பகுதிகளில் சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற மின்வெட்டு, ஏப்ரல் மாத இறுதியில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் 23 மணி நேர மின்வெட்டு, இதனால் பெரும்பாலான மக்கள் முடங்கினர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
டொலர் மதிப்பை இழக்கும்
இது தொடக்கம் மட்டுமே என குறிப்பிட்டுள்ள வாழும் நோஸ்ட்ராடாமஸ், இதனாலையே நேட்டோ அமைப்பு மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இணைந்து ரகசிய கூட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளுக்குள், ஒரு துப்பாக்கி குண்டு கூட செலவிடாமல் ரகசியமாக நடக்கும் ஒரு ரகசியப் போருக்குப் பிறகு அமெரிக்க டொலர் தனது மதிப்பை மொத்தமாக இழப்பதை உலகம் காணும்.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகள் இணைந்து ஒரு புதிய நிதி அமைப்பை உருவாக்கும், மேற்கத்திய நிதி அமைப்பின் பாரம்பரியத்தை மொத்தமாக தவிர்க்கும்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பது வெறும் நாடகம் என குறிப்பிட்டுள்ள வாழும் நோஸ்ட்ராடாமஸ், இந்தப் போரில் தொழில்துறை நாசவேலை மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற வடிவங்களில் ரகசிய மோதல்கள் இன்னும் வெளிப்பட இருக்கிறது என்றார்.
அடுத்த ஆண்டு மற்றொரு போர் முடிவடையும், அது முறையான வெற்றியில் அல்ல, மாறாக பொருளாதார நெருக்கடியால். மார்ச் மாதம் 2026ல் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும், உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும், ரஷ்ய ஆதரவு உக்ரைன் பகுதிகள் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படும்.
இதன் பின்னணியில் சீனா செயல்படும். நியூயார்க், மும்பை மற்றும் லாகோஸ் ஆகிய பெரும் நகரங்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி, அங்குள்ள மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |