ரிலையன்ஸ் குழுமத்தில் முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளில் யார் யாருக்கு அதிக சொத்து
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகள் மட்டுமின்றி, அவரது உறவினர்கள் பலரும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அதிக பங்குகளை கைவசம் வைத்திருப்பவர்
முகேஷ் அம்பானியின் தந்தையுடன் தொடக்க காலத்தில் பணியாற்றிய உறவினர் ஒருவரின் இரண்டு பிள்ளைகளே, தற்போது ரிலையன்ஸ் குழுமத்தில் அதிக சம்பளம் வாங்குகின்றனர்.
நிக்கில் மேஸ்வானி மற்றும் இவரது சகோதரரும் ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து தலா ரூ 24 கோடி சம்பளமாக பெறுகின்றனர். ரிலையன்ஸ் குழுமத்தில் அதிக பங்குகளை கைவசம் வைத்திருப்பவர் முகேஷின் தாயாரான கோகிலாபென் அம்பானி என்றே கூறப்படுகிறது.
அவரிடம் 1,57,41,322 பங்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பங்குகளில் 0.24 சதவிகிதம் என்றே தெரிய வந்துள்ளது. திருபாய் அம்பானி மறைவுக்கு பின்னர், தொழில் ரீதியான செயல்பாடுகளில் கோகிலாபென் ஈடுபடுவதில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் அவரது செல்வாக்கு மற்றும் வழிகாட்டுதல் தற்போதும் குறைவின்றி உள்ளது. முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளில் இஷா அம்பானி ரிலையன்ஸ் சில்லறை விற்பனை பிரிவுக்கு கடந்த 2022ல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலா 0.12 சதவிகிதம் பங்குகள்
அதே ஆண்டு ஜூன் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டார். ஆகஸ்டு மாதம் ரிலையன்ஸ் குழுமத்தின் energy vertical என்ற நிறுவனத்திற்கு தலைவராக ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டார்.
இந்த நிறுவனத்தின் வருவாய் என்பது 2050ல் 200 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தில் முகேஷ் அம்பானி பிள்ளைகள் மூவருக்கும் தலா 0.12 சதவிகிதம் பங்குகள் சொந்தமாக உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தலா 80,52,021 எண்ணிக்கையிலான பங்குகளை தமது மூன்று பிள்ளைகளுக்கும் சரிசமமாக அளித்துள்ளார் முகேஷ் அம்பானி.