என் வாழ்க்கை மலர் படுக்கையல்ல-மகனின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி
திருமண கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி பேசிய வார்த்தைகளைக் கேட்டு முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் திருமண கொண்டாட்டத்தில், மணமகனான ஆனந்த் அம்பானி தனது பெற்றோர் மற்றும் குழந்தைப் பருவத்தைப் பற்றிய பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டம் 3 நாள் விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில், அனந்த் அம்பானி தனது இதயத்திலிருந்து சில வார்த்தைகளை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். அவரத்துப்பேச்சு அம்பானி குடும்பத்தை உணர்ச்சிவசப்படுத்தியது.
குறிப்பாக ஆனந்த், 'எனது குழந்தைப் பருவம் பூக்களின் படுக்கை அல்ல. முட்களின் வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். நான் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன், இந்த விடயத்தில் என் அப்பாவும் அம்மாவும் எனக்கு ஆதரவாக நின்றார்கள்' என்று கூறினார்.
இந்த வார்த்தைகளை கேட்ட ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடிந்தது. அழுதபடியே தனது மகனை கைத்தட்டி ரசித்துக்கொண்டிருந்தார்.
ஒரு நாளைக்கு 3 மணி நேர தூக்கம்
தனது திருமண கொண்டாட்டத்தை குஜராத்தின் ஜாம்நகரில் விழாவை ஏற்பாடு செய்ததற்காக தனது அம்மா நீதா அம்பானிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
'இதெல்லாம் என் அம்மாவால் உருவாக்கப்பட்டது, வேறு யாரும் இல்லை. என் அம்மா கடந்த 4 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே சென்று 18-19 மணி நேரம் வேலை செய்தார். அம்மாவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்'' என்றார்.
தொடர்ந்து பேசிய ஆனந்த், 'என்னையும் ராதிகாவையும் ஸ்பெஷலாக உணர நீங்கள் உழைத்த கடின உழைப்புக்கு நன்றி. கடந்த 2 மாதங்களாக மொத்த குடும்பமும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே தூங்கியது' என்றார்.
ராதிகா கிடைத்த அதிர்ஷ்டம்...
'எனக்கு ராதிகா எப்படி கிடைத்தாள் என்று தெரியவில்லை. ஆனால், அவளைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. அவள் மீதான என் காதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராதிகாவை பார்த்ததும் நெஞ்சில் பூகம்பமும் சுனாமியும் அடிக்கிறது' என்றார் ஆனந்த்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mukesh Ambani in tears, Mukesh Ambani cries, Anant Ambani Radhika Merchant wedding ceremony, Anant Ambani childhood, Anant Ambani speech