டாப் 10 பணக்காரர்கள் பட்டியிலில் முகேஷ் அம்பானிக்கு இடமில்லை
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பெயர் இப்போது உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இல்லை.
Hurun Global Rich List 2025 படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அவரது சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் (Reliance) நிறுவனத்தின் கடன் அளவு அதிகரித்ததே இதற்குக் காரணம். இருப்பினும், அவர் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக தொடர்ந்து உள்ளார்.
உலகின் முதலிடம் யாருக்கு?
Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 420 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இது 82% வளர்ச்சியை காட்டுகிறது. டெஸ்லா பங்கு விலையேற்றம் மற்றும் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை இதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகிறது.
அம்பானியின் சொத்து குறைவு
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைவதற்குக் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் சில்லறை வணிகத் துறைகளின் குறைந்த வளர்ச்சி என கூறப்படுகிறது. அதோடு, பணவீக்கம் மற்றும் அதிகரித்த கடன் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் செல்வந்தர்கள் நிலவரம்
முகேஷ் அம்பானி தொடர்ந்து இந்தியாவின் பணக்காரர் என்ற பட்டத்தை வைத்திருக்கிறார்.
கௌதம் அதானி இந்த ஆண்டில் மிக அதிகளவில் செல்வம் சேர்த்த இந்தியர் என்கிற சாதனையை படைத்துள்ளார். அவருடைய சொத்து ரூ. 1 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
ரோஷ்னி நாடார் (HCL டெக்னாலஜிஸ் தலைவர்) இந்திய பெண்களில் முதல் முறையாக ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025-இன் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். இது HCL நிறுவனத்தின் பங்குகள் மாற்றத்தால் ஏற்பட்ட வளர்ச்சி.
ரிலையன்ஸ் வளர்ச்சித் திட்டங்கள்
OpenAI மற்றும் Meta நிறுவனங்களுடன் AI தொடர்பான ஒப்பந்தங்களை ரிலையன்ஸ் செய்து வருகிறது.
ChatGPT-ஐ இந்தியாவில் வழங்கும் திட்டத்திலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
நவ்யான் ஷிப்யார்டு (Dahej) வாங்கப்பட்டுள்ளது, இது புது மின்சக்தித் திட்டத்திற்காக இருக்கலாம்.
SpaceX-ன் Starlink உடன் இணைந்து இந்தியாவில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை மேம்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.
கடன் இருந்தபோதிலும், அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக தொடர்கிறார் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |