முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலா குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள்... அவரது மொத்த சொத்து மதிப்பு
ரிலையன்ஸ் நிறுவனங்களின் செயற்பாடுகளில் நேரிடையாக ஈடுபடாவிட்டாலும், முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாயார் கோகிலாபென் அம்பானி தமது குடும்பத்திற்கு உறுதுணையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
கோகிலாபென் நேரிடையாக ஈடுபடவில்லை
திருபாய் அம்பானியால் ஒரு சிறிய ஜவுளி நிறுவனமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது பெட்ரோ கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு, எண்ணெய், எரிவாயு, தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம் என இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
தொழில்முறையாக கோகிலாபென் நேரிடையாக ஈடுபடவில்லை என்றாலும், தமது குடும்பத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் அவர் உறுதுணையாக இருந்து வருகிறார்.
கோகிலாபென் அம்பானியின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளிப்படையான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், அவருக்கு ரூ 18,000 கோடி அளவுக்கு சொத்து இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
கோகிலாபெனின் மகன்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானி ஆகியோர் தொழில்முறையாக தீவிரமாக ஈடுபட்டு வருபவர்கள். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளார்.
அவரது தலைமையின் கீழ், ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது. உலகளவில் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படும் முகேஷ் அம்பானி தொலைநோக்கு தலைமைக்கு பெயர் பெற்றவர்.
கோகிலாபென் பெயரிலேயே தற்போதும்
ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக செயல்பட்ட அனில் அம்பானி தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் கோலோச்சினார். இருப்பினும் வணிக சவால்கள் மற்றும் சட்ட மோதல்கள் காரணமாக, ரிலையன்ஸ் குழுமத்தில் அனில் அம்பானியின் பங்கு பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல் உள்ளிட்டவைகளில் கோகிலாபென் எப்போதும் தனிக்கவனம் செலுத்துபவர். கல்வி மற்றும் மருத்துவத்துறைக்காக அவர் பல கோடிகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
உலகத்தரத்தில் மருத்துவமனை ஒன்றையும் அவர் நிறுவியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பெரும்பாலான சொத்துக்கள் கோகிலாபென் பெயரிலேயே தற்போதும் செயல்பட்டு வருகிறது.
அவரது சொத்து மதிப்பு போலவே, அவர் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களும் ஊடகப்பார்வைக்கு எட்டாதவை என கூறுகின்றனர்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |