ஒரே நாளில் மொத்தமாக ரூ 50,000 கோடியை பறிகொடுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
திங்களன்று ஒரே நாளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 3 சதவிகிதம் சரிவடைந்ததை அடுத்து, மொத்தமாக ரூ 50,205 கோடியை இழந்துள்ளார் முகேஷ் அம்பானி.
சரிவுக்கு காரணம்
கடுமையான விற்பனை அழுத்தமே 3 சதவிகிதம் வரையான சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 1761,914.95 கோடி என பதிவாகியுள்ளது.
சென்செக்ஸ் கிட்டத்தட்ட 942 புள்ளிகள் சரிந்து மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. நிஃப்டி திங்களன்று 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து 24,000 க்கு கீழே முடிவடைந்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் அல்லது 1.18 சதவீதம் சரிந்து 78,782.24 புள்ளிகளில் பதிவானது. பகலில், இது 1,491.52 புள்ளிகள் அல்லது 1.87 சதவீதம் சரிந்து 78,232.60 என இருந்தது. NSE நிஃப்டி 309 புள்ளிகள் அல்லது 1.27 சதவீதம் சரிந்து 23,995.35 என இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |