முகேஷ் அம்பானியின் அதிகம் அறியப்படாத சகோதரி... குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள்... அவர் பின்னணி
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் குடும்பமானது, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையால் எப்போதுமே ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகின்றது.
முகேஷ் அம்பானியின் சகோதரி
குறிப்பிட்ட சில அம்பானி குடும்ப உறுப்பினர்கள் மட்டும், இதில் விதிவிலக்காக தங்கள் குடும்பம், தொழில் என ஒதுங்கியே இருக்கின்றனர். அதில் ஒருவர் Nina Kothari. முகேஷ் அம்பானியின் பரவலாக அறியப்படாத சகோதரி.
தமது சகோதரர்கள் இருவர் போலவே, நினா கோத்தாரியும் தொழிலதிபாராக உள்ளார், கோடிகளை குவித்து வைத்திருக்கிறார். நினா தனது சொந்த சாம்ராஜ்யத்தை ஆரவாரமின்றி உருவாக்கியுள்ளதுடன், கார்ப்பரேட் உலகில் தனக்கென ஒரு இடத்தையும் தக்கவைத்துக்கொண்டார்.
பெருமைக்குரிய அம்பானி குடும்பத்தில் பிறந்த நினா, 2003ல் தான் தொழில் துறையில் களமிறங்கினார். Javagreen என்ற பெயரில் காபி மற்றும் உணவு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். பொதுவாக மிகப்பரவலாக அறியப்படும் காபி நிறுவனமல்ல Javagreen.
இருப்பினும், மக்களிடையே அதை அவர் கொண்டு சேர்த்தார். இந்த நிலையில் தான், 2015ல் அவரது கணவர் Bhadrashyam Kothari புற்றுநோயால் மரணமடைந்தார். இதில் மொத்தமாக ஸ்தம்பித்துபோன நினா, தமது இரு பிள்ளைகளை வளர்க்க, சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
HC Kothari குழுமம்
தங்கள் குடும்ப தொழில் நிறுவனங்களான கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை முன்னெடுத்து நடத்த முடிவு செய்தார். படிப்படியாக வளர்ச்சியை பதிவு செய்த நினா, HC Kothari குழுமத்திற்கு என தனி இடத்தை உருவாக்கினார்.
கோத்தாரி குழுமத்தின் பல நிறுவனங்கள் தற்போது நினாவின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இவரது மூத்த மகன் அர்ஜுன் கோத்தாரி, கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
தமது சகோதரர் முகேஷ் அம்பானி போலவே, அவருக்கு நிகராக இல்லை என்றாலும் பெரும் சொத்துக்களை குவித்துள்ளார் நினா கோத்தாரி. சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் தனி முத்திரை பதித்துவரும் கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 435 கோடி என்றே கூறப்படுகிறது.
நினாவின் தாயார் கோகிலாபென் அம்பானி போலவே, தனது சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை கசியவிடாமல் பார்த்துக்கொள்கிறார் நினா கோத்தாரி.