அம்பானி வீட்டு திருமணத்தில் ராஜ சாப்பாடு... மறுபக்கம் பிள்ளைகளுக்கு உணவு இல்லை: மக்கள் கோபம்
அம்பானி குடும்ப திருமணத்தை ஒரு பக்கம் உலகமே வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபக்கம், அவர்களுடைய ஆடம்பர செலவுகளைக் கண்டு பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.
இந்தியாவின் இரண்டு பக்கங்கள்
அம்பானி குடும்ப திருமணத்துக்காக அந்தக் குடும்பத்தினர் கோடிகோடியாக பணத்தை செலவிட்டுவருகிறார்கள். திருமண மாப்பிள்ளையான ஆனந்த் அம்பானி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு வனவிலங்குகள் காப்பகம் நடத்திவருகிறார்.
அங்கு வாழும் விலங்குகளுக்கு ஆனந்த் அம்பானி கிச்சடி, ராகி லட்டு, தர்பூசணி ஜூஸ் மற்றும் பாப்கார்ன் வழங்கிவருகிறார்.
Two Indias.
— أمينة Amina (@AminaaKausar) July 9, 2024
In Vantara, Anant Ambani serves Khichdi, Raggi ladoos, Watermelon juice, Roti, and Popcorn to the elephants.
Meanwhile,
Children in Govt schools in BJP-ruled Chhattisgarh have been enduring a week without even getting khichdi, the bare minimum. Instead, they are… pic.twitter.com/MApz9iNJZG
அதே இந்தியாவில் மற்றொரு மாநிலமான சட்டீஸ்கரில், பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு கிச்சடி கூட கிடைக்கவில்லை.
கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு காய்கறிகளோ, முட்டைகளோ வழங்காததால், சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம் பிள்ளைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது என்கிறார் அமினா கௌசர் என்பவர்.
90 சதவிகித குடும்பங்களுக்கு மாத வருமானம் 10,000 ரூபாய்க்குக் கீழே இருக்கும் நாட்டில், அம்பானி திருமணத்துக்கு 2673 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று கூறும் தாமஸ் ஐசக் என்பவர், சட்டப்படி அது அவர்கள் பணமாக இருக்கலாம், ஆனால், இது பூமித்தாய்க்கும் ஏழைகளுக்கும் எதிரான பாவம் என்கிறார்.
In a country where monthly income of 90% of households are below ₹10000, Ambani wedding of $320 million (₹2673 crores) is obscene. Legally it maybe their money but such ostentatious expenditure is a sin against mother earth and poor.
— Thomas Isaac (@drthomasisaac) July 11, 2024
இன்னொரு விடயம் என்னவென்றால், இப்படி மகனுடைய செலவுக்கு கோடிகோடியாக செலவு செய்துவிட்டு, அந்தச் செலவை மக்கள் தலையில் சுமத்தியுள்ளார் அம்பானி. ஆம், ஜியோ மொபைல் சேவைக் கட்டணங்கள் எக்கச்சக்கமாக உயர்த்தப்பட்டுள்ளன!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |