முல்லைத்தீவில் அகற்றப்படும் சிவப்பு மஞ்சள் கொடிகள்: கெடுபிடி காட்டும் பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் எழுச்சி செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை பொலிஸார் நேற்று எடுத்துச் சென்றுள்ளார்கள்.
மேலும் மாத்தளன் பகுதி, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் ,முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் உள்ள ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Sri Lanka's secuirty forces(tamilguardian)
அத்துடன் பதாதைகளில் உள்ள கார்த்திகை பூவினை அகற்றும் படி கூறும் பொலிஸார், அது தொடர்பான நீதிமன்ற தடையை காட்ட மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மடவாகன சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்டவர்கள் பொலிஸாருடன் உரிமையினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
Sri Lanka's secuirty forces(tamilguardian)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |