பிரித்தானியாவில் 4 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்து: 3 பேர் அதிரடி கைது
3 Arrested Following Multi vehicle crash near Edinburgh: பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய நபர்கள்
பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே திங்கட்கிழமை காலை 9.25 மணியளவில் A8 கிளாஸ்கோ சாலையில் பல வாகனங்கள் மோதிய கோர சாலை விபத்தானது அரங்கேறியது.
ஹிட்-அண்ட்-ரன்(மோதிவிட்டு நிற்காமல் தப்பி ஓடிய சம்பவம்) விபத்தாக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் இந்த சம்பவத்தில், சாம்பல் நிற மெர்சிடிஸ் A250, கருப்பு நிற ரெனால்ட் கேப்டர், சாம்பல் நிற ஸ்கோடா கரோக் மற்றும் சாம்பல் நிற ஹூண்டாய் i30 ஆகிய நான்கு கார்கள் விபத்தில் சிக்கின.
விபத்து குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் ஹூண்டாய் i30 காரை ஓட்டி வந்த 59 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இதில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பேர் கைது
இந்த கோர சாலை விபத்து சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் 32 வயது ஆடவர் ஒருவரும், 19 மற்றும் 23 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் சாலை நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |