இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி ஊடுருவிய மர்ம ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்தும் ராணுவத்தினர்
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ட்ரோன்கள் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துமீறும் ட்ரோன்கள்
ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கட்டுப்பாட்டுக் கோடு(LoC) அருகே இரண்டாவது முறையாக ட்ரோன்கள் அத்துமீறல் நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துமீறிய ட்ரோன்கள் பார்க்கப்பட்டவுடன், இந்திய ராணுவத்தினர் அவற்றை சுட்டு வீழ்த்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
Suspected Pakistani Drones Spotted Along LoC in J&K, Security Forces on High Alert pic.twitter.com/vmod5i2SrK
— The Tribune (@thetribunechd) January 12, 2026
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நெளஷேரா, பூஞ்ச், சம்பா, ரஜெளரி ஆகிய முக்கிய பகுதிகளில் அத்துமீறிய ட்ரோன்கள் கண்டறியப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக இந்த ட்ரோன் அத்துமீறல் நடந்துள்ளது.
ட்ரோன்கள் மூலம் பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருட்களையோ அல்லது ஆயுதங்களையோ வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய ராணுவத்தினர் ஊடுருவல் நடந்த பகுதியை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, குறுகிய காலத்திற்குள் இந்திய எல்லைக்குள் அதிகமான ட்ரோன்கள் அத்துமீறுவது பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 13ம் திகதி கேரி செக்டார் மற்றும் தூங்கா கலி பகுதியில் அத்துமீறிய ட்ரோன்களின் நடமாட்டத்தை ராணுவத்தினர் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |