அந்த துயரம் மனதை மாற்றியது... வாடகைத் தாயாராக மாறிய இரண்டு பிள்ளைகளின் தாயார்
கர்ப்பம் தரிக்க முடியாத பெண்களுக்கு உதவும் பொருட்டு, இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தற்போது வாடகைத் தாயாராக மாறியுள்ளார்.
கருச்சிதைவு வலியை உணர்ந்த
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியை சேர்ந்த 26 வயது யெசெனியா லதோரே என்பவரே தற்போது வாடகைத் தாயாராக தன்னை அடையாளப்படுத்தி வருவதுடன், பல பெண்களை ஊக்குவித்தும் வருகிறார்.
@swns
கர்ப்பம் தரிப்பதை விரும்புவதாக கூறும் யெசெனியா, இரண்டாவது மகனை கருவுற்றிருக்கும் போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் வலியை உணர்ந்த பின்னரே, வாடகைத்தாயாராக வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளதாக யெசெனியா தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது இந்த முடிவுக்கு 27 வயதான தமது துணைவரின் ஆதரவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதன்முறையாக ஒரு பிள்ளையை பெற்றெடுத்து, தம்பதிக்கு கையளித்துள்ளார்.
தற்போது பிரசவத்திற்கு பின்னரான சிகிச்சையில் இருந்து வருகிறார். மட்டுமின்றி, முறையாக அணுகினால், தாம் மீண்டும் கருத்தரிக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தம்மால் இயன்ற உதவி இது
ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் தான் அதன் வலி உணர்ந்ததாக கூறும் அவர், தம்மால் இயன்ற உதவி இது என்றே தெரிவித்துள்ளார். 2021 அக்டோபர் மாதம் வாடகைத் தாய் ஆவதற்கு ஏஜென்சியில் ஒன்றில் கையெழுத்திட்டார்.
@swns
தொடர்ந்து தகுதியுடைய பெற்றோர் அணுக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். இந்த நிலையில், 2022 மே மாதம் அவ்வாறான ஒரு தம்பதி யெசெனியாவை அணுகியுள்ளது.
2022 ஜூன் மாதம் யெசெனியா கரு மாற்றம் செய்துகொள்ள, அதே மாதத்தில் கருவுற்றார். 2023 பிப்ரவரி மாதம் குழந்தையை பெற்றெடுத்து, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது அந்த தம்பதியுடன், நெருக்கமான நட்பு பாராட்டி வருவதாகவும் யெசெனியா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |