மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு இந்திய டப்பாவாலாக்கள் அழைப்பு! அவர்கள் வழங்கப்போகும் வினோத பரிசு
பிரித்தானியாவில் நடைபெறும் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு, இந்தியாவின் மும்பை டப்பாவாலாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை டப்பாவாலாக்கள்
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வரும் மே 6 ஆம் திகதி, 74 வயதான சார்லஸ் மன்னரின் முறையான முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்கு மும்பை டப்பாவாலாக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
@reuters
கடந்த 1890களில் இந்தியாவில் வாழ்ந்த பிரித்தானியர்களுக்கு உணவு டெலிவிரி செய்யும் முறை துவங்கப்பட்டது. இவர்கள் தான் முப்பை டப்பாவாலாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
மேலும் மதிய உணவு டிபன் பாக்ஸை வீட்டிலிருந்து பெற்று, அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு கொண்டு சேர்ப்பவர்கள். உலகளவில் அறியப்பட்ட இந்த மும்பையின் டப்பாவாலாக்கள், புனேரி பகாடி மற்றும் வார்காரி சமூகத்தின் சால்வையை மன்னருக்கு பரிசளிக்கவுள்ளனர்.
@ani
புனேரி பகாடி என்பது ஒரு தனித்துவமான தலைப்பாகையாகும், இதற்கு 2009ஆம் ஆண்டில் புவியியல் அடையாள அந்தஸ்து வழங்கப்பட்டது, மேலும் புனேவில் பெருமை மற்றும் கௌரவத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு
இந்நிலையில் மும்பை டப்பாவாலாஸ் செய்தித் தொடர்பாளர் விஷ்ணு கல்டோக் , பிரித்தானிய தூதரகத்திலிருந்து அவர்களுக்கு அழைப்புகள் வந்ததாக தெரிவித்துள்ளார்.
@toi
"மும்பை டப்பாவாலாக்கள் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் நல்லுறவு கொண்டுள்ளனர். மன்னர் சார்லஸின் திருமணத்திற்கு இரண்டு டப்பாவாலாக்கள் அழைக்கப்பட்டனர். அது எங்களுக்கு கிடைத்த மரியாதை. அவர் ராஜாவாகப் போகிறார். எனவே, சார்லஸ் மன்னருக்கு புனேரி பகடி மற்றும் சால்வையை பரிசளிக்க விரும்புகிறோம். " என்று கல்டோக் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனை மூன்று நாட்களுக்கு பண்டிகை கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் வின்ட்சர் கோட்டையில் பிரபலங்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, நாடு முழுவதும் வீதிகளில் விருந்துகள் மற்றும் "தி பிக் ஹெல்ப் அவுட்" என்ற தன்னார்வ பிரச்சாரம் ஆகியவை நடைபெறவுள்ளது.