ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியை 3 போட்டிகளில் வீழ்த்தி லக்னோ அணி சாதனை
ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் நேருக்கு நேர் மோதிய லக்னோ அணி நடைபெற்ற 3 போட்டிகளில் மும்பையை வீழ்த்தி லக்னோ அணி சாதனை படைத்துள்ளது.
லக்னோ அணி சாதனை
தற்போது 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2 பிரிவாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிச் செல்லும்.
இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி நுழைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று லக்னோவில் 63-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இதுவரை நடைப்பெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோவுடன் 3 போட்டிகளில் மும்பை அணி விளையாடியுள்ளது.
இந்த 3 போட்டிகளிலும் லக்னோவிடம் மும்பை தோற்றுள்ளது. இதனால், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் லக்னோ அணி மும்பை அணியை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி சாதனைப் படைத்துள்ளது.
Thats how you play against mumbai indians!
— gαנαℓ (@Gajal_Dalmia) May 16, 2023
Chaa gaye guru mohsin khan !
We lucknow super giants are in the playoffs for 2nd consecutive time !!! #mivlsg pic.twitter.com/NjpeDJbjyi
LSG team taking lap of honour to Lucknow fans at Ekana after the yesterday's match.
— CricketMAN2 (@ImTanujSingh) May 17, 2023
This is beautiful. pic.twitter.com/77rvIg4soY