17 பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட நபர்: ஒரு அதிர்ச்சி செய்தி
இந்தியாவின் மும்பை நகரத்தில், 19 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட நபர் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
17 பிள்ளைகளை பிணைக்கைதிகளாக...
இன்று, மதியம் 1.45 மணியளவில், மும்பையிலுள்ள Powai என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 13 முதல் 17 வயது வரையிலான சுமார் 17 பிள்ளைகளை ஒரு நபர் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு பெரிய பொலிஸ் படையே விரைந்துள்ளது.
VIDEO | Mumbai: Police rescue over 20 children who were held hostage inside a flat in Powai area. The suspect, who identified himself as Rohit Arya has been arrested, as per the officials.
— Press Trust of India (@PTI_News) October 30, 2025
(Source: Third Party) pic.twitter.com/EsQRqDuISi
ஆடிஷன் நடப்பதாகக் கூறி அந்த கட்டிடத்துக்கு பிள்ளைகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
17 பிள்ளைகளுடன், ஒரு முதியவர் மற்றும் ஒரு நபர் என மொத்தம் 19 பேரை அந்த நபர் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளார்.

பிள்ளைகள் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாகவும், பிள்ளைகளைப் பிடித்துவைத்திருந்த நபர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானதால் பெற்றோர் பதற்றமடைந்துள்ளனர்.

பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த நபர், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மஹாராஷ்டா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரான தீபக் கேசர்க்கர் உட்பட சிலருடன் பேசவேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், தனது கோரிக்கையை ஏற்காவிட்டால், எல்லாவற்றையும் தீவைத்துக் கொளுத்திவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், தீயணைப்புத்துறையினர் இரும்புக் கதவுகளை வெட்டி பொலிசாருக்கு வழி உண்டாக்க, கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், பிள்ளைகள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பிள்ளைகளைப் பிடித்துவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ரோஹித் ஆர்யா என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |