ரூ.6 கோடி அபராதம்., 5 நிர்வாகிகள் கைது: மும்பை மெட்ரோ கட்டுமான விபத்தில் அரசு அதிரடி
மும்பையில் மெட்ரோ கட்டுமான விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ கட்டுமான விபத்து
மும்பையின் முல்லுண்டு பகுதியில் வடாலா தொடங்கி தானே வரை இணைக்கும் மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்தின் கான்கிரீட் சிலாப்(Slap) சரிந்து விழுந்ததில் ராம்தன் யாதவ் என்ற ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை மதியம் கான்கிரீட் சிலாப் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிர அரசு இது தொடர்பான கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசின் அதிரடி நடவடிக்கை
இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
மெட்ரோ கட்டுமான பணிகளை கண்காணித்து வந்த செயல் பொறியாளர் சத்யஜித் சால்வே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒப்பந்த நிறுவனங்களான மிலன் ரோட் பில்டெக் மற்றும் கன்சல்டன்ட் நிறுவனமான லூயிஸ் பெர்கர் ஆகியவை மீது ரூ.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மெட்ரோ கட்டுமான திட்டத்தின் இயக்குனர் ஹரிஷ் சவுகான், 2 திட்ட மேலாளர்கள், மற்றும் நிறுவன ஊழியர்கள் என 5 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்
இந்த விபத்தின் போது கட்டுமான பகுதிக்கு கீழே சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் கார்கள் பலத்த சேதமடைந்தது.
விபத்தில் உயிரிழந்த ராம்தன் யாதவ் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண தொகையாக அமைச்சர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |