தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் - ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய்
6 வயது மகள் ஹிந்தி பேசியதால் ஆத்திரமடைந்த தாய் மூச்சுத்திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார்.
மாரடைப்பு என கூறிய தாய்
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த சுப்ரியா மஹாமுன்கர் என்ற பட்டதாரி பெண்ணுக்கும், பிரமோத் என்ற ஐடி பொறியாளருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு, 6 வயதில் ஒரு மகள்உள்ளது. இந்த குடும்பம், கலம்போலியின் செக்டார்-1 இல் உள்ள குருசங்கல்ப் வீட்டுவசதி சங்கத்தில் வசித்து வருகிறது.
கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி, பிரமோத் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, தனது மகள் அசைவில்லாமல் இருந்ததால், உடனடியாக குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக குழந்தையின் தாய் சுப்ரியா தெரிவித்துள்ளார். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், குழந்தையின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
ஹிந்தி பேசியதால் ஆத்திரம்
6 மணி நேர விசாரணைக்கு பின்னர், குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி, வயிற்றில் முழங்காலால் அழுத்தம் கொடுத்து கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தைக்கு சிறு வயது முதலே பேசுவதில் சிரமம் இருந்துள்ளது. மேலும், குழந்தை தாய் மொழியான மராத்தி பேசாமல், ஹிந்தியே பேசி கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.
இது குறித்து அவர் கணவர் அளித்த வாக்குமூலத்தில், மே மாதம், 2019 ஆம் ஆண்டு தங்கள் மகள் ஒரு மாத குழந்தையாக இருந்தபோதே என் மனைவி மூச்சுத் திணறடித்து கொல்ல முயன்றுள்ளார். குழந்தை அசையாமல் இருந்த நிலையில், பீதியடைந்து உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்ற போது குழந்தை காப்பாற்றப்பட்டது.
ஆனால் அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது தற்செயலாக குழந்தையைத் திருப்பியபோது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவரிடம் தெரிவித்ததால் வழக்கு எதுவம் பதிவு செய்யப்படவில்லை.
தொடர்ந்து, "இந்த குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை. இப்படிப்பட்ட குழந்தை நமக்கு வேண்டாம், ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அடிக்கடி கூறி வந்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டு முதல் அவர் மனநிலை சிகிச்சை பெற்று வந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர், பன்வெல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 29 ஆம் திகதி வரை பொலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |