2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய் பயணம் - கடலுக்கடியில் ஓட உள்ள ரயில்
தொழில்நுட்பம் வளர வளர மக்களின் பயண தூரம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது.
கடலுக்கு அடியில் செல்லும் ரயில்
தரைக்கு மேல் புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடலுக்கு அடியில் 600 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
துபாயில் இருந்து இந்தியாவின் மும்பை வரை கடலுக்கு அடியில் செல்லும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ஆலோசகர் பணியகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.
துபாயிலிருந்து 2,000 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கடியிலான ரயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.
2 மணி நேர பயணம்
இந்த ரயில்கள் மணிக்கு 600 கிமீ மற்றும் 1000 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த ரயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இதற்கு பில்லியன் டொலர் முதலீடு தேவைப்படும். இந்த திட்டத்திற்கு தற்போது அனுமதி கிடைத்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் பொதுமக்கள் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் அழகை ரசித்துக்கொண்டே 2 மணி நேரத்தில் மும்பையில் இருந்து துபாய்க்கு பயணம் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |