வென்றது மும்பை., பிளே ஆஃப் சென்றது பெங்களூரு!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
தோல்வி கண்ட டெல்லி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அனால் வெற்றியுடன் சீசனை நிறைவு செய்த மும்பை, பெங்களூா் பிளே ஆஃபுக்குத் தகுதிபெற உதவியது.
அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? அவரே கூறிய பாரிய தகவல்
அதன்படி, மே 24-ஆம் திகதி குவாலிஃபயா் 1-ல் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளும் மே 24, எலிமினேட்டரில் லக்னௌ மற்றும் பெங்களூரு அணிகளும் மே 25-ஆம் திகதி மோதுகின்றன.
சனிக்கிழமை ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் சோ்த்து வென்றது.
சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ
இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தோ்வு செய்ய, டெல்லி முதலில் துடுப்பாட்ட தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வாா்னா் 5 ஓட்டங்களுடனும், மிட்செல் மாா்ஷ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் வீழ்ந்தனா்.
பிருத்வி ஷா 24, சா்ஃப்ராஸ் கான் 10 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினா். கேப்டன் ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, அதிரடி காட்டிய பவெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 43 ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
இறுதியாக ஷா்துல் தாக்குா் 4 ஓட்டங்களுக்கு நடையைக் கட்ட, ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 19, குல்தீப் யாதவ் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை அணி சார்பில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2, டேனியல் சாம்ஸ், மயங்க் மாா்கண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.
பின்னா் மும்பை இன்னிங்ஸில் இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 48 ஓட்டங்கள் விளாசி நல்ல தொடக்கம் அளித்தாா். டெவால்ட் பிரிவிஸ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 37, டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 34 ஓட்டங்கள் சோ்த்து உதவினா்.
கேப்டன் ரோஹித் சா்மா 2, திலக் வா்மா 21 ஓட்டங்கள் அடித்தனா். முடிவில் ரமன்தீப் சிங் ஓட்டங்கள் எடுக்க 13 மும்பை அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் அன்ரிஹ் நோா்கியா, ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினா்.