1000 வருட பழமையான மம்மி! நரபலி கொடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தைகள்.. திகிலூட்டும் தகவல்
பெரு நாட்டில் சுமார் 1000 வருடம் பழமையான 14 மம்மிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பல்வேறு நாட்டில் இறந்த உடல்களை மம்மி என்ற பெயரில் பதப்படுத்தும் வழக்கம் பின்பற்றபட்டது. அந்த வகையில் பெரு நாட்டில் லிமா என்னும் பகுதியில் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சுமார் 1000 வருட பழமையான மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இன்கானுக்கு முன் 14 மம்மிகள் கிடைத்துள்ளது. அவை யாவும் 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கிடைத்த மம்மிகளில் ஆறு குழந்தைகளின் எனவும் தெரிவித்துள்ளனர்.
அவை ஒரு முக்கிய நபரின் நினைவாக பலிகொடுக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த குழந்தைகள் கல்லறையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இறந்தவர்களின் பாதையில் இறுதி இலக்கை நோக்கி அவருடன் செல்ல முடியும் என்று நம்பப்படுகின்றது.
சடலங்களோடு பீங்கான் பானைகள், அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் போன்றவையும் புதைக்கப்பட்டு இருந்தது. புதைக்கப்பட்ட இந்த உடலுடன் சேர்த்து படையல், உணவுப் பொருட்களும் புதைக்கப்பட்டு இருந்தன.
இந்த மம்மியின் காலத்தை இன்னும் துல்லியமாகக் கண்டறிவதற்காக ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.