மகளுக்காக 6 கோடி செலவிட்ட தாயார்... பின்னர் கொடூர கொலை
இந்திய மாநிலம் ஆந்திராவில் மகளுக்காக செலவிட்ட பணத்தை திருப்பித் தராத காரணத்தால் தாயார் ஒருவர் கூட்டாளிகளுடன் இணைந்து படுகொலைக்கு துணிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொழிலதிபர் ராகுல் கரணம் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் காயத்ரி என்பவர் உட்பட 11 பேர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். காயத்ரி தமது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தரும்படி கொல்லப்பட்ட ராகுல் கரணம் என்பவருக்கு 6 கோடி ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மருத்துவ கல்லூரி இடம் வாங்கித் தருவதற்கு உதவி செய்யாததுடன், பணத்தையும் திருப்பித் தர ராகுல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராகுல் கரணம் என்பவருடன் கொகண்டி சத்யம் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பகை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையிலேயே காயத்ரி உட்பட ஒரு கும்பல் ராகுல் கரணம் என்பவரை கொல்ல திட்டமிட்டு, தொலைபேசி சார்ஜர் ஒன்றை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.