திருமணத்தில் சாப்பாடு சரியில்லை என்று கூறியதால் இளைஞர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் திருமண விருந்து ஒன்று கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபரீதமாக முடிந்த திருமண விருந்து
திருமண விருந்து என்பது பலரது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்து நன்றாக இருந்தால் திருமண வீட்டார் மகிழ்ச்சி அடைவர். அதே சமயம், விருந்து சுமாராக இருந்தால் பலரும் குறை சொல்லத்தான் செய்வார்கள்.
ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விருந்து ஒன்று கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸ்கன்ஜ் மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில், மணமகனின் உறவினர் அருண்குமார் என்பவர் உணவு சரியில்லை என்று குறை கூறியுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த மணமகளின் மாமா விஜயகுமார், அருண்குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
சிறையில் அடைக்கப்பட்ட மணமகளின் மாமா
திருமண வீட்டில் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் துயரமும் சூழ்ந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மணமகளின் மாமா விஜயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |