கணவனைக் கொல்ல செவிலியர் வேலையை பயன்படுத்திக்கொண்ட பெண்: ஒரு திடுக் செய்தி
கணவன் அரபு நாடொன்றில் வேலை செய்துவர, மனைவிக்கு இந்தியாவில் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதலுக்கு கணவன் இடையூறாக இருந்ததால், அவரை காலி செய்ய முடிவு செய்த மனைவி தேர்ந்தெடுத்ததோ, தனது புனிதமான செவிலியர் தொழில்!
கணவனைக் கொன்ற செவிலியர்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள நிஸாமாபாதைச் சேர்ந்தவர் ப்ரஷாந்த். ப்ரஷாந்தின் மனைவி சந்தியா. ப்ரஷாந்த் அரபு நாடொன்றில் வேலை செய்துவர, சந்தியா தெலங்கானாவில் செவிலியராக பணியாற்றிவந்துள்ளார்.

கணவன் அரபு நாட்டில் வேலை செய்யும்போது, சந்தியாவுக்கு அனில் என்னும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடு ப்ரஷாந்த் திரும்ப, தன் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் சந்தியா.
அதன்படி, சந்தியாவின் காதலனான அனில், அவரது நண்பரான வெங்கட் சாய் ஆகிய இருவரும் ப்ரஷாந்த் வீட்டுக்கு வந்துள்ளார்கள். மூவரும் மது அருந்திய நிலையில், ப்ரஷாந்துக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் கொடுத்து, அவரை மாடியிலிருந்து தள்ளிவிட்டுள்ளார்கள் மற்ற இருவரும்.
ஆனால், ப்ரஷாந்த் உயிரிழக்கவில்லை. ஆகவே, அவர் மதுபோதையில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் சந்தியாவும் அவரது கூட்டாளிகளும்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ப்ரஷாந்துக்கு குளூக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்பட்டிருந்த குழாய் வழியாக மயக்க மருந்துகள் மற்றும் டாய்லெட் கிளீனர் ஆகியவற்றை செலுத்தியுள்ளார் செவிலியரான சந்தியா.
ப்ரஷாந்த் உயிரிழக்க, தாங்கள் தப்பிவிட்டதாக சந்தியாவும் அவரது கூட்டாளிகளும் நினைத்துக்கொண்டிருக்க, மகனுடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ப்ரஷாந்தின் தாய் பொலிசில் புகாரளித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையின்போது, சந்தியா, அனில் மற்றும் சாய் ஆகிய மூவரும் அவரை முதல் முறை கொலை செய்ய முயன்றது முதல் இரண்டாவது முறை கொலை செய்தது வர அனைத்தையும் ஒப்புக்கொள்ள மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |