இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை தோசை.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், ஆரோக்கியமான முருங்கைக்கீரை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- பூண்டு- 4 பல்
- முருங்கைக்கீரை- 2 கைப்பிடி
- தோசை மாவு- 2 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு மற்றும் பூண்டு போட்டு வதக்கவும்.
அடுத்து இதில் கழுவி சுத்தம் செய்து வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கவும்.

பின் இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து தோசை மாவில் அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் வைத்து தவா வைத்து தோசை போல் ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான முருங்கைக்கீரை தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |