உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் முருங்கை பொடி இட்லி.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் சாப்பிட்டுவர, ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
மேலும் நீளமான முடியின் வளர்ச்சி, நரைமுடி, வயிற்றுப் புண், உடலில் இரும்புச்சத்தை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு முருங்கைக்கீரை மருந்தாக அமைகிறது.
அந்தவகையில், முருங்கைக்கீரையை பயன்படுத்தி முருங்கை பொடி இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை- 1 கைப்பிடி
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- உளுந்து- 2 ஸ்பூன்
- கடலைபருப்பு- 2 ஸ்பூன்
- பாசிப்பருப்பு- 2 ஸ்பூன்
- மிளகாய் வத்தல்- 8
- உப்பு- தேவையான அளவு
- கடுகு- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் முருங்கை இலை மற்றும கறிவேப்பிலையை நன்கு கழுவி ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடலைபருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு, மிளகாய் வத்தல் போன்றவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதையடுத்து இவற்றை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து இதனுடன் காயவைத்த உப்பு, கறிவேப்பிலை மற்றும் முருங்கை இலைகளையும் சேர்த்து அரைத்தால் முருங்கை பொடி தயார்.
இதற்கடுத்து இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் வேகவைத்த இட்லி மற்றும் அரைத்து வைத்துள்ள முருங்கை பொடியை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கினால் சுவையான முருங்கை பொடி இட்லி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |