தந்தையை 9 வயதில் இழந்த ஏ.ஆர்.ரஹ்மான்: இன்று ரூ 1,728 கோடிக்கு சொந்தக்காரர்
இன்று 59வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
தந்தையின் இழப்பு
ஆஸ்கர், கிராமி விருதுகளை வென்று இசையமைப்பில் பல சாதனைகளை படைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார இசைக்கலைஞராக மாறியிருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணம் இவரது விடாமுயற்சிதான் என்றே கூறலாம். ஏ.ஆர்.ரஹ்மான் தனது 9வது வயதில் தந்தையை இழந்ததால், குடும்ப பொறுப்பை தோளில் ஏற்கும் நிலைக்கு உள்ளானார்.
அவர் சென்னையில் இழப்பு மற்றும் நிதி நெருக்கடியுடன் போராடிக்கொண்டிருந்த சிறுவனாக இருந்தார். ஆனாலும், கலை உலகில் தனது காலடி தடத்தைப் பதிக்க தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்தார்.
தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட வேண்டிய கட்டாயம் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ஏற்பட்டது.
முதல் ஊதியம்
11 வயதிலேயே வேலை செய்யத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு ரெக்கார்ட் பிளேயரை இயக்கியதற்காக தனது முதல் ஊதியமாக ரூ.50-ஐ பெற்றார் (Outlook Business அறிக்கைபடி).
தனது முதல் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அமைக்க உதவுதற்காக, அவரது தாய் தனது நகைகளை விற்று ஒரு Amplifier மற்றும் Equalizer ஆகியவற்றை வாங்கினார்.

பின்னாளில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது 15வது வயதில் இசையை முழுநேரத் தொழிலாகப் பின்பற்றுவதற்காகப் பாடசாலையை விட்டு வெளியேறினார்.
சொத்து மதிப்பு
1992ஆம் ஆண்டில் வெளியான 'ரோஜா' என்ற திரைப்படத்தின் அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இன்று, இந்தியாவின் அதிக ஊதியம் பெறும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் திகழ்கிறார். தற்போது ஒரு திரைப்படத்திற்கு 8 முதல் 10 கோடி ரூபாய் வரையிலும், ஒரு பாடலுக்கு சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரையிலும் கட்டணமாகப் பெறுகிறார்.
பல தொழில்முறை ஒலிப்பதிவு ஸ்டூடியோக்களை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், பல ஆண்டுகளாக தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, ஏ.ஆர்.ரஹ்மானின் நிகர மதிப்பு தோராயமாக ரூ.1,728 கோடியை எட்டியுள்ளது. இது அவரைத் தொழில்முறையின் பணக்காரர்களில் ஒருவராக ஆக்குகிறது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |