என்கூட ஒத்தைக்கு ஒத்த வா... புடினுக்கு எலான் மஸ்க் சவால்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு சவால் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது 19வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனில் தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டர் வாயிலாக ரஷ்ய அதிபர் புடினுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், இதன் மூலம் நான் ரஷ்ய அதிபர் புடினுக்கு ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு சவால் விடுகிறேன். இந்த சண்டையின் பந்தயம் உக்ரைன் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பதிவிட்ட ட்விட்டில், இந்த சண்டைக்கு நீங்கள் தயாரா? என ரஷ்யா அதிபர் புடினின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு மஸ்க் பதிவிட்டுள்ளார்.
Вы согласны на этот бой? @KremlinRussia_E
— Elon Musk (@elonmusk) March 14, 2022