ஊழலை ஒழிக்க எலோன் மஸ்கின் புதிய யோசனை
அமெரிக்காவில் ஊழலை ஒழிக்க டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் புதிய யோசனையை கூறியுள்ளார்.
அரசின் செலவை குறைக்க
டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரருமான எலோன் மஸ்க்கை அமெரிக்காவின் சிறந்த நிர்வாகத்திற்கான துறை தலைவராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்தார்.
சுமார் 364 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட மஸ்க், அரசின் செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மஸ்க் அறிக்கை
அதன்படி முதற்கட்டமாக வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்தினார்.
இந்த நிலையில் ஊழல் ஒழிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஊழலை ஒழிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். அரசு அதிகாரிகளால் பொதுமக்களுக்கு ஆயிரம் மடங்கு செலவாகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |