மனித மூளையில் பொருத்தும் நியூராலிங் சிப்: உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் திட்டம்
மனித மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மனித மூளையில் நியூராலிங் சிப்
எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம், உடல் பாகங்கள் செயலிழந்தவர்களின் எண்ணங்களை முறைப்படுத்தி மூளைக்கும் கணினிக்கும் இடையிலான இன்டெர்ஃபேஸ்(BCI) இணைப்பை உருவாக்கும் சிப்-களை உருவாக்கி வருகிறது.

இந்த சிப்-களை மனித மூளையில் பொருத்தி செயழிலந்த உடல் பாகங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் சோதனையை எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் செய்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளிடம் இந்த சோதனையை நடத்தி வந்த நியூராலிங் நிறுவனம், சமீபத்தில் மனிதர்கள் 12 பேருக்கு நியூராலிங் சிப் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த நவம்பரில் நியூராலிங் அறிவித்து இருந்தது.

BCI சிப்களை அதிகரிக்க திட்டம்
இந்நிலையில் மனித மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் BCI சிப்களின் உற்பத்தியை அதிகரிக்க அந்த நிறுவனம் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் 2026 ம் ஆண்டில் தானியங்கி அறுவை சிகிச்சை முறையில் சிப்களை பொருத்தவும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் வழங்கிய தகவலில், இந்த சிப்களை பொருத்தும் போது த்ரெட்களை அகற்ற வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |