டெஸ்லாவை பின்னுக்கு தள்ளிய சீன நிறுவனம்: மின்சார வாகன சந்தையில் எலான் மஸ்க்-க்கு பின்னடைவு
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனம் என்ற பெயரை எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இழந்துள்ளது.
முதலிடத்தை இழந்த டெஸ்லா
உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா உலக அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

மேலும் உலகளவில் அதிகமாக மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையையும் டெஸ்லா நிறுவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்லா மின்சார கார்களின் விற்பனை சரிய தொடங்கியதன் விளைவாக அதிக மின்சார கார்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனம் டெஸ்லா என்ற பெயரை டெஸ்லா இழந்துள்ளது.
2025ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் கிட்டத்தட்ட 1.64 மில்லியன் மின்சார கர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இது முந்தைய ஆண்டை விட 9% குறைவாகும்.

முதலிடத்திற்கு முன்னேறிய சீன நிறுவனம்
அதிக மின்சார கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை டெஸ்லாவிடம் இருந்து சீன நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு சீனாவின் BYD நிறுவனம் கிட்டத்தட்ட 2.26 மில்லியன் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |