டிரம்ப் கொலை முயற்சியை அடுத்து எலான் மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
உலகளாவிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான Tesla-வின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில், தன்னைக் கொல்ல இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை அடுத்து, தனது பாதுகாப்பு குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார்.
டெக்சாஸில் உள்ள டெஸ்லாவின் தலைமையகம் அருகே சிலர் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக அவர் கூறினார்.

டிரம்ப் மீதான கொலை முயற்சியை அடுத்து, எலான் மஸ்க் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எலோன் மஸ்க்கின் பதிவிற்கு எக்ஸ் பயனர் ஒருவர் பதிலளித்துள்ளார். அதில், 'தயவுசெய்து.. தயவுசெய்து.. உங்கள் பாதுகாப்பை மும்மடங்காக அதிகரிக்கவும்., டிரம்ப்பிற்காக வந்தவர்கள் உங்களுக்காகவும் வருவார்கள்' என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த மஸ்க், 'ஆபத்தான சூழ்நிலைகள் நம்மை எதிர்கொண்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களில் இரண்டு பேர் (தனியான சந்தர்ப்பங்களில்) என்னைகே கொல்ல முயன்றனர். டெக்சாஸில் உள்ள டெஸ்லாவின் தலைமையகத்திற்கு செல்லும் வழியில் துப்பாக்கிகளை காட்டி மிரட்டினர்..," என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Elon Musk, Former US President Donald Trump