என் மனைவி பாதி இந்தியர்... எலான் மஸ்க் கூறியுள்ள விடயம்
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தன் துணைவி பாதி இந்தியர் என்றும், தன் பிள்ளைகளில் ஒருவருக்கு பிரபல இந்திய அறிவியலாளரின் பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கிடம் எழுப்பப்பட்ட கேள்வி
கோடீஸ்வரர் எலான் மஸ்கிடம் நீங்கள் இனவெறுப்பாளரா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது, தன் துணைவி பாதி இந்தியர் என்றும், தனக்கும் அவருக்கும் நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும், தன் பிள்ளைகளில் ஒருவருக்கு பிரபல இந்திய இயற்பியலாளரான சுப்ரமணியம் சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்கின் துணைவியான ஷிவோன் ஸிலிஸ் (Shivon Zilis) கனடாவில் பிறந்தவர். அவரது தாய், இந்தியாவின் பஞ்சாப் பின்னணி கொண்டவர்.
ஆகவேதான், தன் துணைவி பாதி இந்தியர் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

அத்துடன், நான் ஒரு இனவெறுப்பாளர் அல்ல என்று கூறுவேன் என்று கூறியுள்ள எலான் மஸ்க், எனது நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களைப் பார்த்தால், அவர்களில் அனைத்து இனங்களையும் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் உள்ளதைக் காணலாம்.
அங்கே எந்த இனவெறுப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் எலான் மஸ்க்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |