உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க்
பல்வேறு நாடுகளில் அரசியலிலும் தலையிட்டுவந்த உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தற்போது உக்ரைன் விவகாரத்திலும் தலையிட்டுள்ளார்.
எலான் மஸ்க் வெளியிட்டுள்ள புகைப்படம்
2022ஆம் ஆண்டு, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவியான ஒலெனா ஜெலன்ஸ்காவும் (Olena Zelenska), பிரபல பத்திரிகை ஒன்றிற்காக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார்கள்.
’துணிச்சலின் புகைப்படம்: உக்ரைனின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலன்ஸ்கா’ என்னும் தலைப்புடன் அந்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
போரின் மத்தியிலும் உக்ரைன் மக்கள் உறுதியாக நிற்பதை ஊக்குவிக்கும் வகையில் அந்த போட்டோஷூட் நடத்தப்பட்டிருந்தது.
He did this while kids are dying in trenches on the war front pic.twitter.com/NPhDz3cP46
— Elon Musk (@elonmusk) February 20, 2025
ஆனால், அந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள எலான் மஸ்க், போர்முகத்தில் பதுங்கு குழிகளுக்குள் குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கும்போது, ஜெலன்ஸ்கி இப்படி போட்டோஷூட் செய்துகொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், அந்த புகைப்படங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் கிடைத்தன.
அந்த புகைப்படங்களில் ஜெலன்ஸ்கா, நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்தபின் காணப்படும் ஒரு பெண்ணைப்போலத்தான் இருக்கிறார்.
ஒரே வித்தியாசம், அவரது வேலை போரிலிருந்து தன் நாட்டைக் காப்பது என சமூக ஆர்வலர் ஒருவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |