அமெரிக்காவின் எதிர்காலம் அற்புதமாக இருக்கப்போகிறது: வெற்றிக்கு முன்பே பதிவிட்ட மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எதிர்காலம் அற்புதமாக இருக்கப் போகிறது என ஜனாதிபதி தேர்தல் குறித்து பதிவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 எலெக்ட்ரோல் வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பின்னர் பேசிய அவர், "போர்களை தொடங்க மாட்டேன்; நிறுத்துவேன்" என்று உறுதியளித்தார்.

டிரம்பிற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை குறிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
அவரது ஒரு பதிவில் ராக்கெட் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அத்துடன் 'எதிர்காலம் அற்புதமாக அமையப்போகிறது' என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவு வரும் முன்பே மஸ்க் இவ்வாறு பதிவிட்டது கவனம் பெற்றுள்ளது.
The future is gonna be fantastic pic.twitter.com/I46tFsHxs3
— Elon Musk (@elonmusk) November 6, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |