அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்! புளோரிடாவில் வெற்றி உரை
அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.
பெரும்பான்மை பெற்ற டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பெரும்பான்மைக்கு 270 வாக்கு இடங்கள் தேவைப்படும் நிலையில் 277 வாக்கு இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்று குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 226 வாக்கு இடங்களை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
வெற்றியை தீர்மானிக்கும் 7 இழுபறி மாகாணங்களிலும் குடியரசு கட்சி தன்னுடைய வெற்றியை பதிவு செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட தொடங்கியுள்ளனர்.
டிரம்ப் வெற்றி உரை
தேர்தல் முடிவுகள் குடியரசு கட்சிக்கு மற்றும் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெளி வந்து கொண்டு இருக்கும் நிலையில், புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பால்ம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி உரையை நிகழ்த்தி வருகிறார்.
அதில், “அனைவருக்கும் எனது மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
I want to thank you. I will not let you down. America’s future will be bigger, better, bolder, richer, safer, and stronger than ever before. ~ Donald Trump#USAElection2024 #Election2024 #USAElections #USA2024 pic.twitter.com/Nx70Bzp3PM
— poorna_choudary (@poornachoudary1) November 6, 2024
"மிகவும் மோசமான நிலையில் உதவி தேவைப்படும் நாடு உள்ளது, நாங்கள் அனைத்தையும் சரி செய்வோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
"இது ஒரு தெளிவான அரசியல் வெற்றி" என குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப், "இது உண்மையில் அமெரிக்காவுக்கு பொற்காலமாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தினமும் உங்களுக்காக போராடுவேன், என்னை 45 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததற்கும், 47 வது ஜனாதிபதியாக இப்போது தேர்ந்தெடுத்ததற்கும் மிக்க நன்றி", "வளமான அமெரிக்காவை வழங்கும் வரை ஓய்வு எடுக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |