உலகில் மொத்தமுள்ள இஸ்லாமிய நாடுகளில் யார் யாரிடம் அணு ஆயுதங்கள் உள்ளன
உலகில் மொத்தமுள்ள 57 இஸ்லாமிய நாடுகளில் ஒன்று மட்டுமே தற்போது அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது.
அணு ஆயுதம் வைத்திருக்கும்
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏழாவது நாளாக தொடரும் தாக்குதலை இஸ்ரேலும் ஈரானும் தீவிரப்படுத்தி வருகிறது. ஊடகங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இஸ்ரேலின் பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கம் போல் ஜனாதிபதி ட்ரம்ப் தமது பதில்களால் அனைவரையும் குழப்பி வருகிறார். 1990களில் இருந்தே இன்னும் இரண்டு வாரங்களில் ஈரான் அணு ஆயுதம் தயாரித்துவிடும், மத்திய கிழக்கில் ஈரான் அச்சுறுத்தலாக மாறும் என புகார் கூறி வந்துள்ள இஸ்ரேல், தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக போருக்குத் துணிந்துள்ளது.
மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே. இந்த நிலையில், ஈரான் உட்பட உலகில் மொத்தமுள்ள 57 இஸ்லாமிய நாடுகளில் ஒன்று மட்டுமே தற்போது அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது நாடுகள்
உலகளவில், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது நாடுகள் உள்ளன. அவை, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா.
இந்த நாடுகள் மொத்தமாக 12,000 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில், அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரே நாடாக பாகிஸ்தான் அறியப்படுகிறது.
1998 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை நடத்திய பிறகு, பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இணைந்தது.
2025ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. ஈரான், சவுதி அரேபியா உட்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மை நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |