ஹிஜாபை தடை செய்யவுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட நாடு!
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கஜகஸ்தான் ஹிஜாபை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சர் ஐடா பலயேவா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தடையை உறுதிப்படுத்தினார் மற்றும் தற்போதுள்ள விதிமுறைகளை திருத்த முடிவு செய்தார். இந்த செய்தியை கேசின்ஃபார்ம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய (ஹிஜாப்) மற்றும் பிற மத ஆடைகளை அணிவதைத் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு, "பொது இடங்களில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை நாங்கள் கண்டிப்பாக அமல்படுத்துகிறோம். மீதமுள்ளவை மதிப்பீட்டிற்குப் பிறகு செயல்படுத்தப்படும்" என்றார்.
இத்தகைய சட்டங்கள் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் முகத்தை மூடியிருக்கும் நபர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலானது."இந்தப் பகுதியில் விதிமுறைகளை வலுப்படுத்துவதில் அமைச்சகம் தீவிரமாக ஈடுபடும்," என்று அவர் கூறினார்.
மேலும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்) மற்றும் மத அறிஞர்கள் உட்பட நிபுணர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Muslim-majority country Kazakhstan, Kazakhstan, Kazakhstan ban Islamic headscarves in public spaces, Kazakhstan to ban Hijab