பெண்களுக்கு எதிரான தீவிர சட்டங்கள்…தலிபான் அரசுக்கு இஸ்லாமிய நாடுகள் முக்கிய வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் தீவிர இஸ்லாமிய போக்கை குறைக்குமாறு பல முஸ்லிம் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
முஸ்லிம் நாடுகள் கோரிக்கை
கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் காபூலில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு எதிரான இஸ்லாமிய ஷரியா சட்டங்களை தலிபான் அரசு கடுமையாக அமல்படுத்தி வருகிறது.
மேலும் ஆப்கானிஸ்தானில் அவர்கள் செயல்படுத்திய கடுமையான கொள்கைகள் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் இருப்பதாக தலிபான் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
AP
இந்நிலையில் தலிபான்கள் தீவிர இஸ்லாமிய போக்குகளை குறைக்குமாறு பல முஸ்லிம் நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இஸ்லாம் பற்றிய தலிபான்களின் விளக்கம் குறித்து பல இஸ்லாமிய நாடுகள் கவலைப்படுகின்றன என்று அல் அரேபியா போஸ்ட்டின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் தலிபான்கள் தங்கள் சொந்த விளக்கங்களின் அடிப்படையில் இஸ்லாம் ஷரியா சட்டங்களை அமுல்படுத்துவதாக முஸ்லிம் தலைவர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ANI
அத்துடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் உத்தரவுகளை கவனித்து வருவதுடன் அதன் வழிமுறைகளை சீர்திருத்து கொள்ள தலிபான்களை வலியுறுத்தி வருகிறது.
கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டு 57 OIC உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்திய சிறப்பு கூட்டத்தில் தலிபான்கள் ஐ.நா வின் சாசனத்தில் பொதிந்துள்ள "கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு" கட்டுப்படுமாறு வலியுறுத்தினர்.
ஐ.நா பொதுச்செயலாளர் கோரிக்கை
சமீபத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களின் இடைநிலை கல்வி மற்றும் உயர் கல்விக்கான தடைகளை திரும்ப பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தலிபான் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Getty Images
மேலும் தலிபான்களுக்கு கல்வி அடிப்படை மனித உரிமை என்பதை நினைவூட்டிய குட்டெரெஸ், அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழ்நிலையை உருவாக்குவதற்கான உண்மையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.