உடற்பயிற்சியின்போது இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள்
உடற்பயிற்சி என்பது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு செயல்பாடு ஆகும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், எந்த வகையான உணவுகளை உடற்பயிற்சியின்போது எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் எந்த உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பதில் நம்மில் பலருக்கு குழப்பம் இருக்கும்.
எப்போதும் உடற்பயிற்சி செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு எதாவது உணவுப்பொருளை உட்கொள்ள வேண்டும்.
உதாரணமாக வாழைப்பழம் அல்லது ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் உங்கள் உடலுக்கு போதிய ஊக்கம் கிடைப்பதுடன், நீங்கள் சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்யவும் உதவும்.
அதேபோல் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சிற்றுண்டியையும் சிறிதளவு சாப்பிடலாம்.
இந்த உணவுகள் மட்டும் வேண்டாம்
சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உடற்பயிற்சி செய்யும் முன் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் அவை உடலுக்கு அசவுகரியத்தை கொடுக்கும். அத்துடன் உடற்பயிற்சியின் செயல்திறனும் பாதிக்கப்படும்.
அதேபோல் எண்ணெய்த்தன்மை கொண்ட பொருட்களை உட்கொண்டாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
உடற்பயிற்சி செய்யும் ஒரு தம்ளர் தண்ணீர் பருக வேண்டும். ஏனெனில் உடலில் நீர்ச்சத்து பேணுவது அவசியமாகும். ஆனால், தாகமாக இருக்கும் போது அதிக தண்ணீரை பருகிவிட்டு உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.
எந்தெந்த உணவுகளை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடலாம்?
உடற்பயிற்சி செய்து முடிந்த பின்னர் சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம்.
ஏனெனில், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்களை உடற்பயிற்சியின்போது உடல் பயன்படுத்திக் கொள்ளும்.
ஆனாலும், அதனை ஈடுசெய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வது அவசியமானது. சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு பயிற்சியை தொடங்குவது இலகுவான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஆரோக்கியமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |